Sunday, 9 November 2008
தெற்கு ஒசெட்டிய நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்த ருசிய நாடும் தமிழீழம் குறித்த இந்திய அரசின் நிலையும் ! - பன்னாட்டு சட்ட நோக்கில் ஒரு ஆய்வுக் கருத்து
Tuesday, 4 November 2008
உள்ளம் உடையும்முன்... பெரியார் வாழ்வை ஆரிய சனாதன பார்ப்பன எதிர்ப்பு நோக்கி திருப்பிய சேரன்மாதேவி பிரச்சினையினைப் பற்றி அறிஞர் அண்ணா

உள்ளம் உடையும்முன்...
அறிஞர் அண்ணா
(நன்றி - விடுதலை )
நம்பி மோசம் போகிறோம் என்ற எண்ணம் வருகிற போது, நாம் உழைத்தது வீணுக்கு என்று தோன்றுகிற போது, நாம் காட்டிக் கொடுக்கப்பட்டோமோ என்ற சந்தேகம் எழுகிறபோது, நாம் கையாண்ட முறை தவறோ என்ற எண்ணம் ஏற்படுகிற போது, நமது முயற்சிகள் முறிகின்றன என்ற அச்சம் வருகிறபோது, நமது திறமைப் பயனற்ற தாக்கப்படுகிறது என்ற எண்ணம் வருகிறபோது, நாம் அடிமைப்படுத்தப்படுகிறோம், அலட்சியப்படுத்தப்படுகிறோம், என்ற எண்ணம் ஏற்படுகிறபோது, நிச்சயம் உள்ளம் உடையும் நோய்க் கிருமி புகுந்துவிட்டது என்று பொருள். அலங்காரமாகச் சொல்லலாம், என் கடன் பணி செய்து கிடப்பதே என்று; அல்லது, யார் செய்தால் என்ன, எப்படியோ காரியம் நடந்தால் போதும் என்று. ஆனால், அவ்விதம் கூறுபவர்களின் உள்ளம் உடையாது என்று அர்த்தமில்லை. தங்கள் நோக்கமும், தங்கள் கூட்டுத் தோழர்களின் நோக்கமும் பார்வைக்கு ஒன்று போலவே தெரிகிறது - பணிபுரியும் போது அவ்விதமான நம்பிக்கைக்கு முறிவு ஏற்படுகிறது. நாம் கொண்டுள்ள நோக்கத்தை ஆதரிக்கும் எண்ணமின்றி, தட்டிக் கொடுத்து வேலை வாங்கத் தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் போக்கு, கூட்டுத் தோழரிடம் இருக்குமானால், அதை அவர் நெடுநாள் மறைத்து வைத்திருந்து, பிறகு கண்டு பிடிக்க நேரிட்டால், உள்ளம் என்ன, சும்மாவா இருக்கும்? கண்களிலே நீர் கொப்பளிக்கும்! குரல் மங்கும்! தேகம் நடுங்கும்! உலகமே இருண்டு விட்டது போல் தோன்றும்!! என்றும் ஏற்பட்டிராத மாதிரியான அலுப்பு -களைப்பு உண்டாகும். வீணுக்குழைத்தோமடா தோழனே! விபரீதமாச்சுதடா! என்று ஜீவானந்தம் பாடல் உண்டே, அது போன்ற நிலை எட்டாம் மாதம் - இனி சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கணவன் கூற, முகம் மலர்ந்து செல்லும் மனைவிக்கு மருத்துவ மாது, அட சனியனே! அம்மா, விஷயம் வேறாக அல்லவா முடிந்தது. இது சூதகம் - கர்ப்பமல்ல என்று சொன்னால், எப்படி இருக்கும்? பரவாயில்லை. சூதகமானாலும் கர்ப்பமானாலும் கவலை என்ன? என்று கூறாள். அலி சொல்லக் கூடிய வார்த்தை அல்லவா, ஆரணங்குகள் கூறக்கூடியதா! இத்தகைய நிலையிலேதான் உள்ளம் உடையக் கூடிய அறிகுறி தெரியும். இதைக் கவனியாமல் விடுவது, அல்லது கவனித்தாலும் பரிகாரம் தேடாமல் இருப்பது இரண்டும் நோய்க்கு இடம் கொடுக்கும் முறையாக முடியும். யூகமுள்ளவர்களே, இத்தகைய நிலையைக் கண்டறிந்து உடனே, உள்ளம் உடையாதபடி பாதுகாத்துக்கொள்ள வழி தேடுவர். வழி தேடும் போது, சந்தேகிக்கப்படுவர், ஏசப்படுவர் - ஆனால், கவலை கொள்ளார். தலைவலி போக்கிக் கொள்ள நெற்றியில் பச்சிலை அரைத்துப் பூசிக் கொள்ளும் போது பார்ப்பவர் பரிகாசம் செய்வரே, என்று எண்ணிடும் பேர் வழிக்குத் தலைவலி எப்படிப் போகும்! மனவலி தீர்க்கும் மருந்து தேடும் போது, நமக்குள்ள வலிதான்; நம்மை நடத்தி வைக்குமே தவிர, நண்பர்களின் எச்சரிக்கை நடுநிலை தவறுவோரின் ஏசல், சமயத்தை எதிர்ப்பார்ப்போரின் சாகசம், அவசரக்காரரின் தூற்றல் இவைகளின் போக்குக்கு மனவலிக்கு மருந்தளிக்கும் சக்தி கிடையாது. அதனை அவர்கள் அறியார்கள்.
பெரியார் இராமசாமி அவர்களுக்கு, இத்தகைய நெருக்கடி ஏற்பட்டது - உள்ளம் உடையுமோ என்று அவரும் மற்றவர்களும் எண்ணிட வேண்டிய நிலை.
குரு குலப் போராட்டம் - என்று தமிழக அரசியல் குறிப்பேடுகளிலே பொறிக்கப்பட்டுள்ள சம்பவம் இருக்கிறதே, அதனையே நான் கவனப்படுத்துகிறேன்.
வணிக வேந்தராக இருந்த பெரியார் இராமசாமி, நாட்டு விடுதலைப் போரிலே ஈடுபட்டு உழைத்தார் - அலுக்காமல் சலிக்காமல் தமது அருந்திறனைப் பயன்படுத்தி அவருடன் அந்நாள் பணியாற்றின பல தலைவர்களில், ஆச்சாரியார், இன்றைய ஓமந்தூரார் - முதலமைச்சர் ஓமந்தூரார், டாக்டர் வரதராஜூலு, திரு.வி.க. ஆகியோர் முக்கியமானவர்கள்.
நாட்டு விடுதலையே, அனைவரின் நோக்கம்.
அனைவரின் திறனும் இந்தக் காரியத்துக்கே.
பெரியார் பணி புரிந்த போது, இந்தப் பொது நோக்கம் அனைவருக்கும் உண்டு என்று நம்பினார்.
குருகுலம் இந்த நம்பிக்கையைத் தகர்த்தது.
அதனை நடத்திய, வ.வே.சு.அய்யர், பள்ளியில் பார்ப்பன மாணவரும், அல்லாத மாணவரும் வேறு வேறு இருந்தே சாப்பிடவேண்டும் என்றார். இந்தச் சமயம் பள்ளியில் படித்தவர்களில் ஓமந்தூராரின் மகனும் ஒருவராம்.
ஓமந்தூரார், மனம் வேதனைப்பட்டது! திரு.வி.க. வின் மனம் புண்பட்டது! வரதராஜூலு அவர்களின் மனம் வாட்டமுற்றது! பெரியாரின் மனதிலேயே, ஒரு கீறலே ஏற்பட்டுவிட்டது.
வேதனை, ஆதரவு அன்புரை எனும் விருந்தால், குறைந்தது.
புகழ்ச்சி எனும் மருந்திட்டு திரு.வி.க.வின் மனப் புண்ணையும் ஆற்றினார்.
வாடிய வரதராஜூலு அவர்களைத் தேடிப் பிடித்து மோடி செய்யாதே, மடமானே! என்பது போன்ற பாடலைப் பாடியே குஷிப்படுத்தி விட்டனர்.
உள்ளம் உடையுமோ என்று அஞ்ச வேண்டிய அளவுக்கு மனதிலே, கீறல் விழுந்த நிலை பெற்ற பெரியார் இந்த முறைகளினால், சாந்தி கிடைக்காது என்பதை அறிந்து வேறு நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார். அதனால் தான் அவருடைய உள்ளம் உடைபடாமல் இருந்தது.
காந்தியைப் போற்றிக் கதரை உடுத்துமின்
என்ற உச்சாடனத்தைக் கூட விட்டுவிடவில்லை பெரியார். அதனையும் செய்து கொண்டே, பத்திரிகையில் அதனைப் பொறித்துக் கொண்டே, போர் முகாம் அமைக்கிறேன் என்று கூறாமலும் கூட தமது, உள்ளம் உடைபடாதிருக்கவும், ஊராரின் உழைப்பு வீணருக்குப் பலியாகாதிருக்கவும், காங்கிரசுக்குள்ளே நடக்கும் பார்ப்பனீயத்தை மட்டும் கண்டிக்க முனைந்தார் - இன்று? - புது முகாம்!! உள்ளம் உடையவில்லை.
உள்ளம் உடைந்துவிடக் கூடும் என்ற அச்சம் எழ வேண்டியபடி, நோய்க் கிருமி தெரிய ஆரம்பித்த உடனேயே, தடுப்பு முறையைக் கையாண்டதால், பெரியாரால், உள்ளம் உடையாதபடி பார்த்துக் கொள்ள முடிந்தது. அதன் பொருட்டு, அவர் அன்று கொண்ட போக்கும், நடவடிக்கையும் கேலிக்கும் கண்டனத்துக்கும் இடமளித்தது. ஆனால், அவரோ மனவலி போக்கும் முறைப்படி நடந்து கொள்வது நமது பொறுப்பு, அதை அறயாதாரின் கேலியும் கண்டனமும் அவரவர்களுக்கு ஏற்பட்ட மனவலியின் விளைவு - நாம் இவை பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை என்று தீர்மானித்தார்.
அதுதான் சிறந்த முறை - வெற்றிக்கான முறை -வேறு வகையிலே வெற்றிகள் கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, உள்ளம் உடைந்து போகாமலிருக்க இதுவே சிறந்த வழி.
("திராவிட நாடு", 20.4.1947)
Friday, 31 October 2008
செய்திச் சுருக்கம்
Sunday, 10 August 2008
பதிப்புப் பிழைக்கு வருந்திகிறேன்
--
நிஜ வாழ்வில் நடிக்கத் தெரியாத நல்ல மனிதர்.

என் மதிப்பீட்டில் திரு. ரஜினிகாந்த் நிஜ வாழ்வில் நடிக்கத் தெரியாத நல்ல மனிதராக இருக்கிறார். கர்நாடகாவில் ஒகனேக்கல் குடி நீர் திட்டத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு தமிழர்கள் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட போது அதை எதிர்த்து தீவிரமாக எழுதிய நான், அதே சமயத்தில் தீபிகா படுகோனே படத்தைப் போட்டு தமிழர்களைத் தாக்காத தீபிகா போன்ற கர்நாடகா வாழ் மக்களுக்கு எதிராக எந்த கருத்தையும் கூறவில்லை என்று விளக்கமும் கொடுத்திருந்தேன். அதே விளக்கத்தைத் தாமதமாக ரஜினி இப்போது தந்திருப்பதால், அவரின் இந்த நியாயமான விளக்கத்தை மற்றவர்கள் "மன்னிப்பாக" தவறான முறையில் சித்தரிக்க அவர் இடமளித்து விட்டாரென்றாலும், அவரின் இந்த விளக்கத்தில் தவறெதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை; அவர் தமிழர்களைத் தாக்கியவர்களிடம் மன்னிப்புக் கேட்டு விட்டாரென்று சொல்வது முற்றிலும் தவறு மட்டுமல்லாமல் அவர் சொன்ன கருத்தைத் திரித்துக் கூறுவதாகும். ரஜினி செய்த ஒரே தவறு இந்த விளக்கத்தைத் தாமதமாகத் தந்திருப்பது. அதுவும் தனது படத்தை கர்நாடகாவில் வெளியிடும் பொருட்டுக் கூறி இருப்பதால், அவரின் இந்த நியாயமான விளக்கத்தை மற்றவர்கள் தவறான முறையில் சித்தரிக்க இடமளித்து விட்டார்.
திரையில் பேசப்படும் வசனத்தைச் சரியான நேரத்தில் (timing) பேசி கைதட்டல் வாங்கும் அவர் நிஜ வாழ்க்கையில் குறிப்பாக குறிப்பாக அரசியல் ரீதியான மக்கள் பிரச்சினை குறித்த விளக்கத்தை நேரந்தவறி "timing" பிசகி கூறியிருப்பதால் அவரது தாமதமான ஆனால் சரியான விளக்கத்தை மற்றவர்கள் தமிழ் நாட்டின் சுய மரியாதையை பாதிக்கும் மன்னிப்பாக தவறாக சித்தரிப்பதற்கு இடமளித்து விட்டார்!
ஆனால் இதை அவர் வேண்டுமென்றே செய்யவில்லை. கர்நாடகாவில் அவர் படம் குறித்து பிரச்சினை எழுந்த பொழுது இயல்பாக பேசியிருக்கிறார். இதை அப்படி செய்யாமல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கமாக அவர் கூறி இருந்தால் இவ்வாறு அவர் கருத்து திரித்து கூறப்படாமல் தடுத்து இருக்கலாம்.
கர்நாடகாவில் அவர் படம் குறித்த பிரச்சினையை நிவர்த்திக்க பண்பு கருதி அவர் கூறிய கருத்து, தமிழ் நாட்டின் தன்மான பிரச்சினையாக மாற்றப்படும் என்று துளியும் அரசியல் மனம் இல்லாத அவர் எதிர்பார்த்து இருக்க மாட்டார்!
அரசியலில் அல்லது மக்கள் பிரச்னையில் அவர் "டைமிங்" தவறி பேசுவதில் இருந்தே அவர் அரசியல் மனம் இல்லாத நிஜ வாழ்வில் நடிக்கத் தெரியாத அப்பாவி என்பதை நிருபித்து விட்டார். அவர் சொன்னதில் டைமிங் தவறி இருக்கிறதே ஒழிய கருத்தில் பிழையில்லை!
Thursday, 7 August 2008
News Report: Former Tamil Nadu Chief Minister Ms. J. Jaya Lalitha moves court for the retrieval of Katcha Theevu island from Sri Lanka!
Wednesday, 30 July 2008
Clarification of my comment on DMK:


Why terror strikes India? A sociological analysis.

Photos courtesy of the "Sydney Morning Herald":
DISTINGUISH CASTE SYSTEM AND CASTE IDENTITIES AS BEING INDEPENDENT OF AN INDIAN DRAVIDIAN INDIVIDUAL'S RELIGIOUS CHOICE.
RECOGNISE THE CASTE SYSTEM AS AN APARTHEID SYSTEM IMPOSED ON OTHERS (NON-SANATHANIST INDIAN DRAVIDIANS) BY THE SANATHANISTS THROUGH THEIR SCRIPTURAL HINDU LAW, AND DO NOT EQUATE THE CASTE SYSTEM WITH A NON-EXISTENT AND FABRICATED RELIGIOUS LABEL CALLED "HINDUISM".
RECOGNISE ONLY BRAHMANS, KSHATRIYAS, VYSYAS, KAYASTHAS AND OTHER SUCH "TWICE BORN" TRIBES WHO HAVE EXCLUSIVE RIGHT FOR SACRAMENTAL AND SCRIPTURAL MEMBERSHIP IN SANATHANISM AS BEING THE ONLY MEMBERS OF THE SANATHANIST RELIGION, BY LEGALLY DEEMING THEM AS "SANATHANIST TRIBES".
ENACT A SECULAR CIVIL LAW FOR ALL THOSE WHO FOLLOW A NON - SANATHANIST RELIGION OR A RURAL FOLK RELIGION (EXCEPT FOR JEWS, MUSLIMS, CHRISTIANS, ZOROASTRIANS AND SANATHANISTS).
SCRAP ALL THE CURRENT HINDU LAW REGIMES THAT FRAUDULENTLY IMPOSE THE HINDU LAW AND HINDU RELIGION ON "ONE AND ALL" (EXCEPTING JEWS, MUSLIMS, ZOROASTRIANS AND CHRISTIANS) THAT CAUSE THE DESTRUCTION OF THE INDEPENDENT IDENTITIES OF NON-SANATHANIST INDIGENOUS RELIGIONS SUCH AS LINGAYATISM, BUDDHISM, JAINISM, DRAVIDIAN SAIVISM, DRAVIDIAN VAISHNAVISM, VALLALARISM, NARAYANA GURUVISM, AYYA PATHISM, ETC., THEREBY CAUSING THE CO-OPTION OF THE LATTER NON-SANATHANIST RELIGIONS TO THE BLANKET HINDU LABEL AND THE CASTE SYSTEM IMPOSED BY THE LEGAL BODY OF HINDU LAW COMPRISING OF VEDAS, UPANISHADS, SHRUTHIS AND SMIRUTHIS, INCLUDING MANUSMIRUTHI.
LEGALLY RECOGNISE THE INDEPENDENT RELIGIOUS IDENTITY AND STATUS OF EVERY NON-SANATHANIST RELIGION SUCH AS LINGAYAT VEERA SAIVITE RELIGION, VALLALARIST RELIGION, NARAYANA GURUVITE RELIGION, BUDDHISM, JAINISM, SIKHISM, MEI VAZHICHALAI RELIGION, DRAVIDIAN SAIVISM, DRAVIDIAN VAISHNAVISM., OR BY THEIR RELEVANT NAMES, ETC., BUT NEVER IMPOSE THE TERM HINDU OR HINDUISM ON THESE NON-SANATHANIST RELIGIONS.
GIVE INDEPENDENT RECOGNITION TO THE VERY MANY FORMS OF RELIGIOUS WORSHIP THAT EXISTS AMONGST DALITS, BAHUJANS AND INDIGENOUS PEOPLES WHICH DO NOT POSSESS A CODIFIED SCRIPTURAL THEOLOGY BY USING THE TERM "RURAL INDIGENOUS FOLK RELIGIONS", AND NEVER USE THE TERM HINDU OR HINDUISM TO REFER TO THE LATTER RELIGIONS OF BAHUJANS, DALITS AND ADIVASIS.
DO NOT ALLOW SNATHANIST BRAHMANS TO WORK AS PRIESTS IN THE TEMPLES OF NON-SANATHANIST RELIGIONS SUCH AS DRAVIDIAN SAIVISM, DRAVIDIAN VAISHNAVISM, OR TEMPLES OF RURAL FOLK RELIGIONS, BECAUSE THE THEOLOGY OF SANATHANISM HAS NOTHINGTO DO WITH THESE NON-SANATHANIST RELIGIONS.
NOTE: SANATHANIST BRAHMANS HAVE IMPOSED ON THEMSELVES A MONOPOLY ON PRIESTHOOD IN NON-SANATHANIST TEMPLES TO FOOL THE NON-SANATHANIST RELIGIONISTS INTO THINKING THAT BRAHMANS AND SANATHANISTS BELONG TO THE PARTICULAR NON-SANATHANIST RELIGION (WHEN THE TRUTH IS THAT SANATHANISTS PRACTICE ONLY SANATHANISM AT HOME), SO THAT THE PARTICULAR NON-SANATHANIST RELIGION CAN BE DESTROYED, CORRUPTED AND CO-OPTED WITH THE CASYE SYSTEM, SANSKRITISED, AND BROUGHT UNDER THE AUTHORITY OF SANATHANISTS.
SET UP A NATIVE INDIGENOUS RELIGIOUS COMMISSION SO THAT THE FOLLOWERS OF GREAT MANY RELIGIOUS SCHOOLS IN INDIA CAN APPLY AND GET LEGAL RECOGNITION FOR THEIR RELIGION THAT WILL BE INDEPENDENT OF SANATHANISM.
SCRAP THE TERMS HINDU AND HINDUISM FROMLEGAL TERMINOLOGY AND EXPLICITLY BAN ALL USAGE OF THESE TERMS.
RENAME THE HINDU TEMPLES AND ENDOWNMENTS BOARD AS"INDIGENOUS, RURAL AND FOLK RELIGIONS ENDOWMENTS BOARD".
AWARD AFFIRMATIVE ACTION FOR INDIAN DRAVIDIAN BAHUJANS (BCs) AND INDIAN DRAVIDIAN DALITS (SCs) AND INDIGENOUS DRAVIDIANS (STs), IRRESPECTIVE OF THEIR INDIVIDUAL CHOICE IN RELIGION WHICH THEY MAY CHOOSE FROM ANY ONE OF THE AFORESAID NON-SANATHANIST RELIGIONS OR INDIGENOUS RURAL FOLK RELIGIONS, CHRISTIANITY, ISLAM OR INDEED ATHEISM.
AND ONCE AGAIN, SCRAP THE TERMS HINDU AND HINDUISM FROM LEGAL TERMINOLOGY AND EXPLICITLY BAN ALL USAGE OF THESE TERMS.
Unless Indian Dravidians (Bahujans, Dalits and indigenous peoples) unite as one people by throwing off the caste system and assert their non-Sanathanist (non-Hindu) religions, thought and conscience by challenging the violation of the latter by the Hindu law and Hindu terminology, such terror attacks will continue in India to sustain the apartheid of the Sanathanist racist twice born rule by dividing and ruling Indian Dravidians through the fraudulent terms of "Hindu" and "Hinduism", and denying any elementary investment in the social welfare, health, education, housing, sanitation and human rights of the Indian people!
Tuesday, 29 July 2008
இன்றைய இனியனின் செய்தி அலசல் - News Analysis And Comment:
The following is a news report from today's "Asian Age" :
By Dippy Vankani
Mumbai
July 28: Maharashtra's Anti-terrorist Squad (ATS), which is investigating the blasts said that they have not yet given a clean chit to Ken Haywood and his wife. The American couple was detained by the ATS after the Internet Protocol (IP) address of the mail sent to the country's security agencies minutes before the blast was traced to them. The police said that they did not find any record from Mr Haywood's laptop that could establish that he sent the message.
அண்மையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு பொறுப்பேற்று, ஒரு முஸ்லீம் அமைப்பின் பெயரைப் (பொய்யாகக்) குறிப்பிட்டு குண்டுகள் வெடிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் எச்சரிக்கை செய்து இந்திய அரசின் பாதுகாப்புத் துறைகளுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு அமெரிக்கரின் மடிக்கணிணியிலிருந்து அனுப்பப்பட்டதென்று தெரிந்த பின்னும் ஏனந்த நபரைக் கைது செய்யவில்லை?
இந்திய மக்களிடையே பூசலையும் வன்முறையையும் உண்டாக்கி சனாதன மதவெறிச் சக்திகளைப் பலப்படுத்த மேற்கத்திய அய்ந்தாம் படையினர் முயல்வர் என்று பலவாண்டுகளாய் நான் எழுதி வருவதை இந்தச் செய்தி நிருபனைச் செய்கிறது. இதுவே அந்த நபர் முஸ்லீமாகவோ சனாதன இரு பிறப்பாளரல்லாத இந்தியத் திராவிடராகவோ இருந்திருந்தால் இந்நேரம் கைது செய்யப்பட்டு நையப் புடைக்கப்பட்டு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார் அல்லவா?
Why wasn't the person (implicated in the news report given above) not arrested despite the technical evidence and fact that the email sent to pre-warn the security agencies of the serial blasts was sent from his laptop and the fact that no one else has used his laptop? This news confirms my earlier writings in the past that western intelligence agencies may be involved in destabilising and weakening India along sectarian lines by engineering blasts and violence to politically strengthen right wing Hindu fascist parties.
Sunday, 27 July 2008
இன்றைய இனியனின் கருத்து


Friday, 25 July 2008
Thursday, 24 July 2008
தொழில் நுட்பப் பிழையால் இன்று பதிப்பிக்கப்பட்ட வலைப்பூக்களில் ஏற்பட்ட சொற் பிழைகளுக்கு வருந்துகிறேன். பிழைகள் திருத்தப்பட்டுள்ளன.
இன்றைய இனியனின் கருத்து:

பிற்படுத்தப்பட்ட இந்தியத் திராவிட மக்களின் இட ஒதுக்கீட்டை உயர் கல்வி நிறுவனங்களில் இல்லாமல் செய்யும் "கிரீமி லேயர்" அநீதியை நிரந்தரமாக ஒழிக்க அரசியல் சாசனத் திருத்தம் கொண்டு வருவது.
சேதுத் திட்டத்தைச் செயல்படுத்தாமல் தடுக்கும் அனைத்து தடைகளையும் நீக்கி, திட்டத்தினை பாதை மாற்றாமல் செயல்படுத்துவது.
தமிழீழத் தமிழர் மீதும் தமிழக மீனவர் மீதும் சொல்லவொண்ணா மனித உரிமை மீறல்களையும் இனப் படுகொலையையும் நடாத்தி வரும் இலங்கை அரசுக்குத் இந்திய அரசு தரும் இராணுவ உதவிகளை முற்றிலும் நிறுத்துவது.
இராணுவ நடவடிக்கை என்ற போர்வையில் அல்லது விடுதலைப் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கை என்றச் சாக்கில் அப்பாவித் தமிழ் மக்கள் மீது படுகொலைகளையும், பாலியல் வன்முறையையும், சித்திரவதையையும் நடாத்தி வரும் சிங்கள இனவெறி அரசப் பயங்கரவாதத்தை முற்றிலும் இலங்கை அரசு நிறுத்தும்படி செய்ய இந்திய மய்ய அரசு தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்துவது.
நம்பிக்கைத் தீர்மானத்தில் வாக்களித்ததிற்கு பலனாக அல்லது மாற்றாக மேற்கூறிய பலன்களை "அரசியல் விலையாக" தி்.மு.க பெற்றிருந்தால் மகிழ்ச்சி. இல்லையேல் கூட்டாட்சித் தத்துவ அரசியல் விளை நிலத்தின் அறுவடைச் செயல்பாடான (மய்யக் கூட்டணி அரசின்) நம்பிக்கை வாக்களிப்பில் மய்யக் கூட்டணி அரசிற்கு ஆதரவாக வாக்களித்ததற்கு பலனாக - அரசியல் விலையாக தமிழ் நாட்டு மக்களின் மேற் கூறிய நலன்கள் முன்னிறுத்தப்படவில்லையென வரலாறு பேசிட வாய்ப்பிருக்கிறது என்பதை மிகப் பணிவுடன் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கட்குத் தெரிவிக்கத் தமிழனாகக் கடமைப் பட்டுள்ளேன்.
இனியனின் நேற்றைய கருத்து: (ஒரு நாள் தாமதமாக வெளிவருகிறது)

Tuesday, 22 July 2008
இன்றைய இனியனின் கருத்து:





Monday, 21 July 2008
படமும் செய்தியும்:
இன்றைய இனியனின் கருத்து :

இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்துக்கு எதிரான என் நிலைப்பாடு கட்சி அரசியல் நோக்கம் கொண்டதல்ல. ஆகவே எந்தவொரு கட்சிக்கு ஆதரவாகவோ எதிராகவோ இந்நிலைப்பாட்டை நான் எடுக்கவில்லை. கட்சி சார்பற்ற புவிச் சூழல் பாதுகாப்பு, இந்திய மக்களரசு மக்களுக்காகச் செயல்படும் அரசாக மாறுவதற்கு வேண்டிய பொருளியல் இறையாண்மை போன்ற காரணங்களுக்காகவும், இந்தியத் துணைக் கண்ட மக்களின் பொருள் வளத்தை மூன்று நூற்றாண்டுகளாகச் சுரண்டி பல கோடி மக்கள் பஞ்சத்திலும் இனப் படுகொலையிலும் மாள்வதற்குக் காரணமாக இருந்த பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியம் - இந்தியத் துணைக் கண்டத்தின் மேல் கோலோச்சியதற்கு நன்றி தெரிவித்ததன் மூலம் தன்னை ஏகாதிப்பத்தியத்தின் அடிவருடி என்று இந்தியப் பிரதமராக மன்மோகன் இங்கிலாந்திற்கு வருகை தந்த போது தன்னைக் காட்டிக் கொண்டு இந்திய மக்களின் தன்மானத்தைக் கப்பலேற்றிய அவர் (மன்மோகன் சிங்) - இந்திய நாட்டை ஏகாதிப்பத்திய சக்திகளிடம் அடகு வைக்க தயங்க மாட்டார் என்பதாலும், இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்துக்கு எதிராக கட்சி சார்பற்று மனச்சாட்சிப்படி வாக்களிக்கும்படி மக்களவை உறுப்பினர்களை நாட்டுப் பற்றுள்ள (தமிழத் திராவிட) இந்தியக் குடிமகனாக வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
Sunday, 20 July 2008
News Links :
Click on the links below:
Vaccine Deaths in Mumbai Prompt Government Probe
Measles vaccine deaths trigger panic in Mumbai
இன்றைய இனியனின் கருத்து :



இளஞ் சிறார்களைக் கொன்று பிள்ளைக் கறி தின்று கோடிகளில் இலாபம் ஈட்டும் இந்த அயோக்கிய மருத்துவ நிறுவனங்களுக்கு எதிராக (ஒடுக்கப்பட்ட மக்களின் ஏழைச் சிறார்களின் உயிர்களைத் துச்சமென எண்ணி செயல்படும்) அதிகாரிகள் வர்க்கமும் - ஊடக வர்க்கமும் - அரசியல் வர்க்கமும் நடவடிக்கை எடுப்பார்களென எதிர்பார்ப்பது வீணே!
திருத்தம் 2
உடனடி சிகிச்சை வசதியின்மை பற்றிய கருத்தில் அதிகாரிகள் வர்க்கம், ஊடக வர்க்கம் மற்றும் அரசியல் வர்க்கம் மேல் பாய்ந்திருக்க வேண்டிய என் கருத்துக் கணை தட்டெழுத்துப் பிழையால் விட்டுப் போய் விட்டது. திருத்திய வரிகள் பின்வருமாறு :
சென்ற ஆண்டு மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி வங்காளத்தில் சாலை விபத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது சைக்கிள் ரிக்-ஷா வண்டியில் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப் பட்டார் என்ற செய்தி கூட ஒளிப் பிம்ப போதையிலும் உலகமயமாக்கல் நாகரிகத்திலும் ஆழ்ந்து கிடக்கும் அதிகாரிகள் வர்க்கத்திற்கும் - ஊடக வர்க்கத்திற்கும் - அரசியல் வர்க்கத்திற்கும் - படித்த பணமுள்ள வர்க்கத்திற்கும் இந்த வெட்கமற்ற அவல நிலையை "உறைக்க" முடியவில்லை !
Saturday, 19 July 2008
இன்றைய இனியனின் கருத்து :

Friday, 18 July 2008
இன்றைய இனியனின் கருத்து :


Click on the links below:
Thursday, 17 July 2008
இன்றைய இனியனின் கருத்து: சாதி ஒழிப்பை நோக்கிய படிகள் - (முதல் பகுதி)

அமெரிக்காவில் சென்ற நுாற்றாண்டின் அறுபதாவது ஆண்டுகளில் ஆப்பிரிக்க மரபு வழி கறுப்பின மக்கள் வெள்ளையரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒதுக்கப்பட்ட இடங்களில் வாழ்விக்கப்படுவதும் ஒதுக்கப்படுவதும் சட்டப்படி தடை செய்யப்பட்டு, சட்டத்தின் சக்தியால் கறுப்பின மக்களும் வெள்ளையின மக்களும் ஓரிடத்தில் கலந்து வாழ வைக்கப்பட்டதைப் போன்று, இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் தாழ்த்தப்பட்ட தொல்தமிழ் மரபினரான தலித் மக்களைத் தனிமைப்படுத்தி "சேரி, காலனி", என்று பலவகைப் பெயர்களால் அழைக்கப்படும் ஒதுக்கப்பட்ட இடங்களில் வாழ வைக்கப் படுவது தடை செய்யப் பட்டு குற்றமாக அறிவிக்கப்பட வேண்டும். இத்துடன் மற்ற மக்கள் வாழும் நகரம் மற்றும் கிராமத்தின் மய்யப்பகுதிகளில் தலித் மக்கள் வாழ நவீன வீடுகள் கட்டித் தரப் பட வேண்டும். சாதிச் சமூகத்தால் தனிமைப்படுத்தப்பட்ட ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வாழ வைக்கப்படுவதால்தான் தலித் மக்கள் எளிதாகத் தாக்கப் படுகிறார்கள். இத்துடன் அனைத்து சாதி வழி (குலத்) தொழில்களைத் தடை செய்ய வேண்டும். அனைத்துச் சாதிப் பெயர்களையும் தடை செய்ய வேண்டும். வேலையில்லாதோர்க்கும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்க்கும் பாதுகாப்பு ஊதியம், உணவுப் பாதுகாப்பு மற்றும் அனைத்து நிலைகளிலும் அனைவருக்கும் கல்வி, மருத்துவ வசதி, வீட்டு வசதி ஆகியவை இலவசமாக கட்டாயமாக வழங்கப்பட வேண்டும்.
Wednesday, 16 July 2008
கருத்தும் படமும் : கச்சத் தீவை மீட்க வேண்டும்!
Sunday, 13 July 2008
Photo News: Other news images of the masses who gathered for the "Pongu Tamil" meeting conducted yesterday in London:
Saturday, 12 July 2008
Photo News: படச் செய்தி:
An elevated aerial view of the crowd that attended the "Pongu Tamil" event in London today, to assert the right to self rule of Eelam Tamils and calling for protection of Tamil human rights and justice for victims of past (and continuing covert) genocide. (Photo courtesy of the news website puthinam.com )
வாழ்த்துக்கள்
Tuesday, 8 July 2008
திருத்தம் - CORRECTION:
இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் பற்றிய வலைப் பூவின் முதல் வரியில் "பல லட்சம் கோடி" என்று எழுதுவதற்குப் பதிலாக "பல லட்சம்" என்று தவறுலாக எழுதப்பட்டிருந்தது இப்பொழுது திருத்தப்பட்டுள்ளது.
எதிர்க் குறள் : "ஒப்புரவு ஒழித்தல்" - இனியனின் கவிதை
நகைக்க வாழ்தல் தலை
திகைப்பார் சுற்றார் என பதுங்காமல் – ஊர்
திகைக்க புகழாள்தல் முறை
வதைப்பார் மற்றோர் என ஒழியாமல் – அறிவு
விதைத்து வளர்த்தல் கலை
பழிப்பார் உற்றம் என அடங்காமல் – தீமை
அழித்தல் தலையான மறை
அஞ்சுவார் நண்பர் என ஒதுங்காமல் – பகுத்து
அஞ்சாமல் அறிவை வரை
ஒடுக்குவார் சமூகம் என மயங்காமல் – நீதி
தடுப்போரை மறுத்து உரை
அடிப்பார் எனவொடுங்கிடாமல் - காதல் நட்பை
எடுப்பதே வாழ்வின் விலை
முடிப்பார் வாழ்வை எனத் தாழாமல் – அறிவால் (கிளர்ந்து)
வெடித்திடு உரிமைத் தடை
மிதிப்பார் என்றெண்ணி நாணாமல் – சாதி
விதிப்போரை நையப் புடை
தடுப்பார் மாற்றார் எனத் தயங்காமல் – மகிழ்வின்
மடுப்பை வாழ்வில் விதை
நொடிப்பார் எனவஞ்சாமல் போடு – பிறருரிமை
ஒடுக்காமல் உரிமை நடை
சிறு அலசல் : இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம்
டென்மார்க், நார்வே, ஃபின்லாந்து, சுவிட்சர்லாந்து போன்ற பல நாடுகள் அணு உலைகளுக்கு செலவிடுவதில்லை, ராக்கெட் விடுவதில்லை, ராணுவத்திற்காகத் தேவையில்லாமல் செலவழிப்பதில்லை. ஆனால், மேற்கூறப்பட்ட அனைத்துத் தேவைகளையும் மக்களுக்கு அரசே செய்து கொடுத்து வளத்தில் வாழ வைக்கிறது. மேலும், இத்தகைய நாடுகளின் அரசுகள், போருக்கோ – இராணுவச் செலவுகளுக்கோ தேவையில்லாத வகையில் பிரச்சினைகளைத் தீர்த்து, அண்டை நாடுகளோடு ஒன்றியங்களை, கூட்டு அமைப்புக்களை வலுப்படுத்துகின்றன. ஆனால், இந்த நாடுகளில் இந்தியாவில் இருப்பது போல் மக்களைச் சாராத ஒரு ஆதிக்க இனம் ஆளும் அதிகார வர்க்கமாக இல்லை என்பதை உணர வேண்டும் !
இனியனின் சிறு கருத்து: வன்முறைக் கொலைக்கள அரசியல்வாதிகள் !
கலைஞர் கவிதை ;

புயல் வேகம், புது வேகம் கொள்வோம்!
தன்னிலை விளக்கம்:
தமிழகத் தமிழர்களாக இருந்தாலும், தமிழீழத் தமிழர்களாக இருந்தாலும், மலேசியத் தமிழர்களாக இருந்தாலும், சாதியால் ஒடுக்கப்படுகிற தொல் தமிழர்களாக இருந்தாலும், தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும், அவர்கள் வாழ்வுரிமை, மனித உரிமை, அரசியல் உரிமைகளுக்காக எனது எளிய எழுத்தை ஈந்த அடியார்க்கு அடியவன். தொண்டரடிப் பொடியவன்.
குறிப்பாக தமிழீழத் தமிழர்களின் தாயக மீட்புக்கான அரசியல் மற்றும் களப் போராட்டம் வெல்ல வேண்டும் என்ற நிலைப் பாட்டிலும், மற்றும் தமிழீழத் தமிழர்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் நான் என்றும் உறுதியான மாறாத நிலைப்பாடு கொண்டவன். ஆனால் நான் எந்த இயக்கத்தையும் சார்ந்தவனல்ல.
இருப்பினும், சமூக - உளவியல், கலை-பண்பாட்டுத் தளங்களில் இருந்தும், சமயம் கடந்த தமிழர் (வட மொழியில் : திராவிடர்) தொல்லியல் அடிப்படையிலான தமிழ் மொழியினத் தன்ணுணர்வு அடிப்படையிலும், பெரியாரியல் - அம்பேத்கரியல் நோக்கிலும் - தமிழர் மேம்பாட்டிற்காகவும், வெற்றிக்காகவும் நான் கருத்துக்களைக் கூறிடும் போது, அதைத் தங்களுக்கு எதிரான கருத்தாக தமிழர்கள் சிலர் எண்ணிக் கொண்டால் அது அவர்களது அறியாமை !
இந்நிலையில், நான் சமூக அரசியல் கருத்துக்கள் குறித்து எழுதுவதை நிறுத்தி விட்டது ஏன் என்று சிலர் வினா எழுப்பி மடல் வரைந்திருக்கிறார்கள்.
நான் பொருள் – தொழில் வாழ்விலும், காதல் - அக வாழ்விலும், கலை - இலக்கிய ஆழ்விலும் முனைந்திருப்பதால் எனது எளிய சமூக அரசியல் எழுத்துக்களை நிறுத்தி வைத்திருக்கிறேன். இருப்பினும், தமிழ் மொழியினில் மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் எளிய மருத்துவக் கையேடுகளைக் கொணர்ந்து தமிழை அறிவியல் மொழியாக ஆக்குவதற்கு என் பங்கையாற்ற செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். இதைத் தவிர ஆங்கிலத்திலும் பெண்களுக்கான மருத்துவ இதழ் ஒன்றைக் கொணர முயன்று வருகிறேன்.
(குறிப்பு: திராவிடர் என்றச் சொல் அதன் வடமொழிப் பொருளான தமிழர் என்ற பொருள்படவே பயன்படுத்தப் படுகிறது. அதாவது தமிழர் என்ற சொல்லை ஆங்கிலத்தில் "டமிலியன்" (Tamilian) அல்லது "டமில்" (Tamil) என்று கூறுவதைப் போல வட மொழியில் "ட்ராவிட" (திராவிட) என்ற சொல் பயன் படுத்தப் படுகிறது. இது அம்பேத்கரியல் அடிப்படையிலான கூற்று. எனவே “திராவிட” என்றச் சொல்லை தென்னிந்தியர் என்ற பொருள்பட பயன்படுத்துவது தவறு.
தொல் தமிழ் பேசிய மொகஞ்சா தாரோ – ஹராப்பா நாகரீக மக்கள் துவங்கி ஆரியக் கலப்பால் தமிழ் மொழியை இழந்து புது மொழிகளைப் பெற்று விட்ட இந்தியாவில் உள்ள அனைத்து பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை தமிழ் தொல்லின வழி மக்கள் “people of Indian Tamilian racio-anthropological origin” என்றுதான் குறி்ப்பிட வேண்டும். இது அம்பேத்கரியல் அடிப்படையிலான கூற்று.





