Sunday, 20 July 2008

இன்றைய இனியனின் கருத்து :
















தடுப்பு ஊசிகளால் அண்மையில் இந்தியாவின் பல பகுதிகளில் சிறார்கள் இறந்த போது, தரங் குறைந்த தடுப்பு ஊசி மருந்துகள் தயாரிக்கப்பட்டதா என்று கண்டறிந்து மருந்தைத் தயாரித்த நிறுவனர்களைத் தண்டிக்கவோ, அல்லது, முறையான பதப்படுத்தும் முறைகளில் தடுப்பு ஊசி மருந்துகள் பராமரிக்கப்படாமல் விடப்பட்டதா என்று அறிந்து சம்பந்தப்பட்ட மருத்துவத் துறை அதிகாரிகளைத் தண்டிக்கவோ, அல்லது வேறு மருத்துவ அறிவியல் காரணங்களைக் கண்டறியவோ, இவ்வாறு உண்மையைக் கண்டறிந்து உயிரைப் பறி கொடுத்த இளம் மலர்களுக்கு நீதி வழங்கும் வகையில் - நோய்த் தடுப்பு மருத்துவர்களும் (immunologists / microbiologists) நீதிபதிகளும் அடங்கிய விசாரணைக் குழு தேசிய அளவிலோ மாநில அளவிலோ அமைக்கப்படாதது ஏன்? தங்கள் கடமையை வெறுமெனச் செய்த மருத்துவர்கள் மேல் பழி சுமத்தி பணி நீக்கம் செய்தது ஏன் ? இது பற்றி ஊடகங்களும் கண்டு கொள்ளாதது ஏன்? இந்தியாவில் உள்ள சில அயோக்கிய மருத்துவ நிறுவனங்கள் தவறாக - தரமில்லாமல் - கலப்படத்துடன் உருவாக்கிய தடுப்பு ஊசி மருந்துகளைப் பயன்படுத்தியதால் கியுபா நாட்டிலும் சிறார்கள் கொல்லப்பட்டதாக கீ்ழ்க்கண்ட இணையச் செய்தி தெரிவிக்கிறது.

Click on the link below:








இளஞ் சிறார்களைக் கொன்று பிள்ளைக் கறி தின்று கோடிகளில் இலாபம் ஈட்டும் இந்த அயோக்கிய மருத்துவ நிறுவனங்களுக்கு எதிராக (ஒடுக்கப்பட்ட மக்களின் ஏழைச் சிறார்களின் உயிர்களைத் துச்சமென எண்ணி செயல்படும்) அதிகாரிகள் வர்க்கமும் - ஊடக வர்க்கமும் - அரசியல் வர்க்கமும் நடவடிக்கை எடுப்பார்களென எதிர்பார்ப்பது வீணே!