Sunday, 9 November 2008

தெற்கு ஒசெட்டிய நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்த ருசிய நாடும் தமிழீழம் குறித்த இந்திய அரசின் நிலையும் ! - பன்னாட்டு சட்ட நோக்கில் ஒரு ஆய்வுக் கருத்து

நான்காம் திருத்திய பதிவு !
ஈழத் தமிழர் பிரச்சினை இன்னொரு நாட்டின் இறையாண்மை சம்பந்தப்பட்டது ஆகவே இந்திய அரசு ஒன்றும் செய்ய இயலாது என்று கூறுவது பன்னாட்டு மனித உரிமைகள் சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. ஒரு நாட்டில் ஒடுக்கப்படும் இனத்தைக் காப்பாற்ற அந்த சிறுபான்மை இனத்தவரின் இன்னொரு நாட்டரசு தம் இனம் ஒடுக்கப்படும் நாட்டின் மீது போர் தொடுக்கலாம் அல்லது தலையிடலாம் என்பது பன்னாட்டு மனித உரிமைகள் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு உரிமை. இதன் அடிப்படையில் பல எடுத்துக் காட்டுகளைக் கூறலாம். ஹிட்லர் தான் சார்ந்த செருமானிய இனம் ஒடுக்கப்படுவதாக கூறித்தான் போலந்து நாட்டின் மீது படையெடுத்தார். அண்மையில் ஜார்ஜியா நாட்டின் ஒரு பகுதியாக இருந்த தெற்கு ஒசெடியா மாநிலத்தின் சுயாட்சி மற்றும் சுதந்திர பிரகடனத்தை ஆதரித்து ஜார்ஜியா மீது ருசியா போர் தொடுத்து தெற்கு ஒசெடியா நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்தது ! இதற்குக் காரணம் தெற்கு ஒசெட்டியர் ருசிய இனத்துடன் நெருங்கிய தொடர்புடைய இனம் என்பது மட்டுமல்ல வடக்கு ஒசெட்டிய மாநிலம் (இந்தியாவில் தமிழ் நாட்டைப் போன்று) ருசியாவில் ஒரு சுயாட்சி பெற்ற மாகாணமாக இருக்கிறது ! எனவே தங்கள் இனத்தவரான தெற்கு ஒசெட்டியர் சுதந்திர நாடாக ருசிய நாட்டின் மாகாண மக்களான வடக்கு ஒசெட்டியரின் வற்புறுத்தல் காரணமாக ருசிய நாடு ஜார்ஜியா மீது படையெடுத்து தெற்கு ஒசெட்டிய நாட்டிற்கு விடுதலையை உறுதி செய்தது ! (ஆனால் இதே ருசிய நாடு செசென்யா மக்களை ஒடுக்குகிறது என்பது வேறு விஷயம்) ! இதே போல் பிஜி நாட்டில் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்தோர் ஒடுக்கப்பட்ட போது இந்திய அரசு தலையிட்டு நிலையை மாற்றியது ! உண்மையில் இந்தியாவில் உள்ள அனைத்து பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட தொல் குடி மக்கள் அனைவரும் இந்திய திராவிடர் என்ற இனத்தவரே (அதாவது திராவிடர் என்ற சொல் தமிழர் என்ற சொல்லுக்கு வட மொழிப் பதம் என்பதால், இந்திய தமிழர் என்றுதான் தமிழ் பேசாத இதர பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களைக் கூற வேண்டும் !) ஆனால் இந்த மரபின உணர்வு இந்தியத் திராவிடர்களுக்கு வராமல் தடுக்கும் வகையில் சனாதன ஆரியர் தம் மதத்தோடு துளியும் சம்பந்தமில்லாத இந்தியத் திராவிடரை சாதி கொண்டு பிரித்தாளவும் இந்திய திராவிட மதங்கள் மற்றும் - வழிபாட்டு நிலைகளுக்கு இந்து என்ற பெயரில்லாத தனி அங்கீகாரத்தை மறுக்கவும், இந்தியத் திராவிடர் பெயரில் ஆளும் வர்க்கமாக சிறுபான்மை மக்களான சனதான ஆரியர் ஆதிக்க இனமாக இந்திய திராவிட திரு நாட்டை ஆளவும், "இந்து' என்ற போலியான அர்த்தமற்ற பாராசீக சொல் சநாதனிகளற்ற இந்தியத் திராவிடர் மீதும், இந்தியத் திராவிடர் உறுப்பினர்களாக இருக்கவே சட்டப்படி உரிமையில்லாத சனாதனிகளின் சனாதன மதத்தின் மீதும் பொய்யாக திணிக்கப் படுகிறது ! இந்த ஏமாற்று வேலையை உறுதிப் படுத்த இந்தியத் திராவிடர்களின் திருக் கோயில்களிலே அக் கோயில்களின் திராவிட மதங்களோடு சம்பந்தமில்லாத சனாதன ஆரியர் பூசாரிகளாக இருப்பது கடைப் பிடிக்கப்படுகிறது ! ஆகவே தம் இனத்தவரான ஈழத் தமிழர் ஒடுக்கப்படும் போது தமிழ் பேசாத வட மொழிக் கலப்பினால் வேற்று மொழி பேசும் இந்திய திராவிடர் பொங்கியெழுவதும் இல்லை, அதே போல், இந்தியா பெரும்பான்மை இந்தியத் திராவிடரல்லாத சிறுபான்மை சனாதன ஆரியர்களால் ஆளப்படுவதால் ருசியா தெற்கு ஒசெட்டியாவிற்கு விடுதலை தர போர் தொடுத்தது போல இந்திய நாட்டரசு ஈழத் தமிழர் விடுதலை பெற போரும் தொடுக்கப் போவதில்லை எதையும் கிழிக்கப் போவதில்லை !
ஆனாலும், தமிழ் நாட்டுத் தமிழர் தமிழீழ விடுதலை ஆதரித்தும், ஈழத் தமிழர் இனப் படுகொலை தடுப்பு மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு நோக்கிலும் தொடர்ந்து குரல் கொடுத்து எழுச்சி காட்டினால்தான், அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது போல, இந்திய அரசைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் சனாதன ஆரிய வர்க்கமும் ஈழத் தமிழர் விடுதலை மறுக்கும் தன் நிலைப் பாட்டை மாற்றிக் கொள்ளும் !